மாங்குளத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.

இன்றையதினம் கனேடியத்தமிழ்த்தேசிய அவையின் "மண்வாசனை" அமைப்பின் நிதி உதவியின் மூலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்ட பொருண்மிய மேம்பாட்டுப்பிரிவும் மனிதாபிமானப்பிரிவும் இணைந்து தேசத்துக்காக தங்களது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினை சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திரு.தம்பிஐயா, முல்லைமாவட்ட அமைப்பாளர் திரு.விஜயகுமார்,மாங்குளம் ம.வி அதிபர், முல்லைமாவட்ட செயலாளர் திரு.கிந்துஜன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு.விமலாதரன், மாங்குளம் செயற்பாட்டாளர்கள் திரு.சுரேஸ்,திரு.பிறேம் ஆகியார் கலந்து கொண்டார்கள். நினைவுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் ஏற்றியதைத்தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்று நிகழ்வின் இறுதியில் உலர் உணவுப்பொருட்களும் பழமரக்கன்றுகளும் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வினை முல்லைமாவட்டச்செயலாளர் திலகநாதன் கிந்துஜன் நெறிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.