சுமந்திரன் கூட்டமைப்பில் போட்டியிடவில்லை!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட மாட்டார் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்,சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தேசிய பட்டியல் வழங்கப்படும் என்பதாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.

அவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் முயற்சிக்கிறார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
#Dayasiri Jayasekara #M A Sumanthiran  #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  
Powered by Blogger.