நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளது

வடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி
இன்று புதன்கிழமைகாலை பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்துள்ளது.இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு, முல்லைத்தீவு, திருகோணமலை, காங்கேசன்துறை கடற்பிராந்தியங்களில் மாலை வேளைகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் அதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழை காரணமாக நந்நிக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து நந்திகடல் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.