பத்து வருடக் காத்திருப்புக்குப் ‘பலன்’!

அஜித், நயன்தாரா ரசிகர்களிடையே பத்து ஆண்டுகளாக இருந்துவந்த ‘குறை’யைத் தீர்த்து வைத்திருக்கிறது ‘விஸ்வாசம்’ திரைப்படம்.


முதல் முறையாக பில்லா திரைப்படத்தில் 2007ஆம் ஆண்டு ஒன்று சேர்ந்தது அஜித்-நயன்தாரா ஜோடி. 2007இல் பில்லா, 2008இல் ஏகன், 2013இல் ஆரம்பம் எனத் தொடர்ந்து நடித்த இந்த ஜோடி, 2018ஆம் ஆண்டு விஸ்வாசம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. கொஞ்சம் வயதான கேரக்டரில் நடித்ததால், சிவாவுடன் அஜித் இணைந்த வீரம், விவேகம் ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்துக்கு ஜோடி இருந்தாலும் திருமணமே நடைபெறாமல் போனது. அதுபோலவே நயன்தாரா நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்திலும் இருவருக்கும் திருமணம் நடக்காமல் ஒரு வழக்கமான காதல் கதையாக இருந்துவிடப்போகிறதென ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருந்தது.

ஆனால், பில்லா-ஏகன்-ஆரம்பம் என ஒன்று சேராமல் இருந்த அஜித்-நயன்தாரா ஜோடி, ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களுக்குப் பிறக்கும் மகளாகத்தான், கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அங்கிதா நடிக்கிறார். 

No comments

Powered by Blogger.