பிரசன்னாவை பேசவைத்த ‘மீம்’!

மீம் என்றாலே பயப்படும் அளவுக்கு சினிமா துறையை நடுங்க வைத்து
வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். ஓரிரு இடங்களில் சுவாரசியமான மீம்கள் உருவாகினாலும், பல மீம்கள் ஒருவரைப் புகழவும், இன்னொருவரை இகழவுமே உருவாக்கப்படுகின்றன. இந்த கலாச்சாரப் புயலில் இன்று சிக்கியவர் பிரசன்னா.
2011ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட படத்தையும், 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கியதையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது ஒரு மீம். அதனைப் பகிர்ந்து பல விதங்களிலும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவந்தனர் ட்விட்டர்வாசிகள். ஆனால், அவர்களில் ஒருவர் கொஞ்சம் அதிகபட்சமாகச் சென்றார்.
“சிவகார்த்திகேயன் சிறந்த தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு அவ்வளவு திறமை இல்லை. சொல்லப்போனால், அவர் தொகுத்து வழங்குவதைப் பார்க்க சோர்வாக இருக்கிறது. பிரசன்னா ஒரு சாதாரண நடிகர். ஆனால், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் சிறந்த எண்டர்டெயினர்” என்று அந்த ட்விட்டர்வாசி குறிப்பிட்டிருந்தார். அதில், அவருக்கு ஆதரவாகவும், அவரது கருத்தை மறுத்தும் பலர் பேசினார்கள். ஆனால், ஆச்சர்யமளிக்கும் விதத்தில் நடிகர் பிரசன்னா தனது பதிலைக் கொடுத்திருந்தார்.

No comments

Powered by Blogger.