மரண தண்டனை கைதி கொலை தொடர்பில் விசாரணை

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சிறைச்சாலை தலைமையகம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகிய மூன்று தரப்பால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க கூறினார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அதே சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் தொடர்பில் விசாரிக்கப்படுகின்றன.
Powered by Blogger.