டயானாவிற்கு இளவரசர் எழுதிய ரகசிய கடிதம்

டயானாவை திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டிய பிரித்தானிய இளவரசர் சார்லஸ் திருமணத்திற்கு முன்தினம் இரவு, ரகசிய கடிதம் ஒன்று எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.



பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1981-ம் ஆண்டு ஜூலை 29ம் தேதியன்று, 750 மில்லியன் மக்கள் புடைசூழ டயானாவை திருமணம் செய்துகொண்டார்.

சார்லஸ் டயானாவை திருமணம் செய்து கொள்வதில் தீவிரமான சந்தேகங்கள் இருந்ததாக பல கூற்றுக்கள் இருந்தபோதிலும் கூட, இளவரசர் தன்னுடைய மணமகளுக்கு ஒரு இனிமையான செய்தியை அனுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



கேமில்லா பார்க்கர் பவுலஸின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய புத்தகத்தில், அரச எழுத்தாளர் பென்னி ஜுனர் எழுதியிருக்கும் அந்த குறிப்பில், திருமணத்திற்கு முன் தினம் மாலை டயானா தன்னுடைய சகோதரி ஜேன் உடன் கிளாரன்ஸ் ஹவுஸில் தங்கியிருந்தார்.

அப்போது இளவரசர் ஒரு வைர மோதிரத்துடன் ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார். அந்த கடிதத்தில், "நான் உன்னை நினைத்து பெருமைகொள்கிறேன். நீ நாளை எழுந்திருக்கும்போது நான் உனக்காக ஆலய பீடத்திலிருப்பேன். உன்னுடைய கண்கள் என்னை நோக்கும்போது நான் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறேன்" என குறிப்பிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.


டயானாவை திருமணம் செய்வது மிகப்பெரிய தவறு. ஆனால் தற்போது காலங்கடந்துவிட்டது என சார்லஸ் கருதியதாகவும், திருமணத்திற்காக கண்ணீருடன் தன்னுடைய மனதினை மாற்றிக் கொண்டே டயானா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஜூனர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டயானாவை திருமணம் செய்துகொள்வதில் தான் சரியானதை தான் செய்கிறேனா என்பதை சார்லஸ் நம்பாமல் இருந்தார். ஆனால் வேறு வழியில்லை. திருமணத்திற்கு பின்னர் டயானாவை மாற்றிக்கொள்ளலாம் என நம்பியே தைரியத்துடன் சார்லஸ் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வருட ஆரம்பத்தில் ராயல் நிருபர் ராபர்ட் ஜாப்ஸன் தான் எழுதிய ஒரு சுயசரிதை புத்தகத்தில், தன்னுடைய திருமணம், பாரிய தவறு என சார்லஸ் அறிந்திருந்ததாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டயானாவுடன் தனது உறவைத் தொடங்குவதற்கு முன்பு சார்லஸ் கேமிலாவைக் காதலித்தார், ஆனால் அவர் தனக்கு பொருத்தமானவராக இருக்க மாட்டார் என கருதியே அவரை விலக்கியதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.