பிரித்தானியா தமிழீழ தேசிய மாவீரர் நாள்

தேசத்திற்காய் தம்மை ஈகம் செய்தோரை கனத்த மனதுடன் பாசத்தோடு நினைவில் ஏற்றி உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்.


வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2018ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக  பல்லாயிரக்கணக்கான மக்களோடு  அனு~;ட்டிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தாயக செயற்பாட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் திரு யோகராஜா நமசிவாயம் ஏற்றி வைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை  பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி திக்சி சிறிபாலகிறிஸ்னன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை அனைத்துலகச் செயலக இணைப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பு  செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த  மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில்  ஈகைச்சுடரினை 11-10-1998இல் தமிழீழ விடுதலைப்போரில் மன்னார் மாவட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கப்டன் தேவதர்சன் எனும் நல்லையா சந்திரகுமாரின் துணைவியார் திருமதி சந்திரமதி சந்திரகுமார் ஏற்றியதைத் தொடர்ந்து  கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து எம் மாவீரச்செம்மல்களின் வீரதீர தியாக நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்கள் தாங்கி கனத்த மனதோடு வணக்கம் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.