அயர்லாந்தில்தலைநகர் டப்ளின் தேசிய நினைவெழுச்சி நாள்!

அயர்லாந்து தலைநகர் டப்ளின் (Dublin) இல் எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், மற்றும் இலங்கை அரசினால் இதுவரைகாலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சிநாள் இடம்பெற்றது.


முதலில் பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் திரு.ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , மற்றும் அனைத்துப் பொது மக்களுக்காகவும்தேசியநினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர்வணக்கத்தையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் பிரார்த்தனைமேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலாநிதி ஜூட் லால் அவர்கள் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர்,எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தமாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்டபல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி  எடுத்துக்கூறினா ர்.

இதனைத் தொடர்ந்து  கவிஞர்  திரு  தனது கவிதை ஒன்றினை வாசித்தார். தொடர்ந்து

 உணர்வுமிக்க மாவீரர் கவிதை மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  உணர்வுமிக்க புதிய மாவீரர் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.