கருத்துச் சுதந்திரத்தை பொலீஸாரை கொண்டு நசுகின்றார் வேழமாலிகிதன்

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் சபையில் உறுப்பினர்களின் கருத்துச் சுதந்தரத்தை பொலீஸாரைக் கொண்டு நசுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.


சபையின் சட்ட நடவடிக்கைகளுக்கு மாறாக கேள்வி மனுக்கோராமல் பசுமை பூங்காவில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு தவிசாளரால் வியாபாரம் நிலையம் வழங்கப்பட்டுள்ளது என்று எதிர்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இக் குற்றசாட்டை முன்வைத்த உறுப்பினர் இ.இளங்கோ என்பவரின் குரலை அடக்கி சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு செயலாளர் க.கம்சநாதனை பொலீஸ் நிலையத்திற்கு அனுப்பி பொலீஸாரை அவரது பேச்சுமொழியில் சொன்னால் சிங்கள பொலீஸாரை சபைக்குள் கொண்டு வந்து உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முற்பட்டுள்ளார்.
Powered by Blogger.