இந்தியாவும் நேரடியாக களத்தில். இரா.சம்மந்தன்!

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா? மஹிந்த ராஜபக்ஷவா? என்ற குழப்ப நிலை சர்வதேச ரீதியில் சூடுபிடித்துள்ளதையடுத்து இதற்கு முடிவு கட்டும் வகையில் இந்தியாவும் நேரில் களமிறங்கியுள்ளது.தமது நாட்டு பிரதிநிதிகளைக்கொண்டு இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் இரகசிய சந்திப்புகளை இந்திய மத்திய அரசு நடத்தி வருகின்றது என அறியமுடிகின்றது

அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மன்சிங் 

மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் நேற்றுக் கொழும்பில் நடத்திய சந்திப்பின் புகைப்படங்களை கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

 “பேச வேண்டிய விடயங்களை எல்லாம் பேசினேன். இலங்கையில் என்ன நடந்தாலும் அது நாட்டின் அரசமைப்புக்கு இணங்க – நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்துடன் நடைபெற வேண்டும் என்று

 என்னைச் சந்தித்த இந்தியப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன். இந்தியா எமது அயல் நாடு. எனவே, இலங்கை விடயத்தில் இந்தியா நடுநிலையுடன் நிதானமாகச் செயற்பட வேண்டும் என அவர்களிடம் கூறினேன்”  என்று பதிலளித்தார்.
Powered by Blogger.