இலங்கையின் அரசியல் நிலை தொடர்பில் அவதானிப்பு -ஆஸி.வெளிவிவகார அமைச்சர்


இலங்கையில் நிலவும் அரசியல்  நிலையினை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார்.


குறித்த இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “..ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
எனவே நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும்..” எனவும் அவர் வழியுறுத்தியுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.