மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம்!

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments

Powered by Blogger.