ரஜினியின் புதிய ஆலோசகர்!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“ரஜினிக்கு புதிய அரசியல் ஆலோசகர் சந்திரபாபு நாயுடு என்பது ரஜினியை நன்கு அறிந்தவர்கள் மட்டும் தெரிந்த விஷயம். அண்மைக்காலமாக சந்திரபாபு நாயுடுவுடன் தான் அதிகம் தொடர்பில் இருக்கிறாராம்.
இதன் முழு விபரங்கள் தெரிந்தவர்களிடம் விசாரித்தோம். ‘என்.டி.ராமராவ்- சிவபார்வதி திருமணத்திற்கு பிறகுதான் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு. பிறகு கட்சியும் ஆட்சியும் சந்திரபாபு நாயுடு வசமானது. அப்போது ரஜினி ஹைதராபாத் போனார். நாயுடுவை சந்தித்துப் பேசினார். நாயுடுவுக்கு ஆதரவாக அப்போது ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கையும் வந்தது. அந்த சமயத்தில் ரஜினி நடித்த பெத்தராயுடு படம் தெலுங்கில் சக்கப் போடு போட்டுக் கொண்டிருந்தது என்பதால், ரஜினியின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அந்த நட்புதான் தொடர்ந்து வந்தது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘250 சீட் நாம ஜெயிச்சிடுவோம். அதனால நீங்க எங்க பக்கம் வாங்க..’ என ரஜினியைத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கு ரஜினியோ, ‘இந்தியாவிலேயே உங்களுக்கு கடுமையான எதிர்ப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதனால உங்களோடு வந்தால் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்பே இல்லை’ என நேரடியாகவே சொல்லிவிட்டாராம். ஆனால் கட்கரியோ, ‘நாங்கதான் திரும்ப ஆட்சி அமைக்கப் போறோம். நீங்க வந்தால் நல்லா இருக்கும் என்றுதான் உங்களை கூப்பிடுறோம்’ என சொன்னாராம். ஆனால், ரஜினி கடைசி வரை பிடிகொடுக்கவே இல்லையாம்.
கட்கரி பேசிய தகவலை உடனடியாக சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அதைக் கேட்டுச் சிரித்த சந்திரபாபு நாயுடு, ‘அவங்க இன்னும் கனவுலயேதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுக்கெல்லாம் வாய்ப்பெல்லாம் இல்ல. 180 சீட் பிஜேபி ஜெயிக்கும். காங்கிரஸ் கட்சி 120 சீட் ஜெயிக்கும். மத்ததெல்லாம் மாநில கட்சிகள்தான் ஜெயிக்கும். யாரு ஆட்சி அமைப்பாங்க என்பதை மாநிலக்கட்சிகள்தான் முடிவு செய்யும். இப்படித்தான் அவங்க ஒவ்வொரு மாநிலத்துலயும் அழுத்தம் கொடுத்துட்டு இருக்காங்க. நீங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க. அங்கே மாயாவதியை காங்கிரஸோடு கூட்டணி சேர விடாமல் தடுத்துட்டு இருக்காங்க. நீங்க போற ரூட்ல போய்ட்டு இருங்க. உங்களை இழுக்கணும் என்பதுதான் அவங்க திட்டம். அதுக்கு நீங்க வளைஞ்சு கொடுக்காதீங்க..’ என்று சொன்னாராம். இதுதான் ரஜினியின் புது அட்வைஸர் கொடுத்த அட்வைஸ். இதற்குப் பிறகு, எந்த சூழ்நிலையிலும் பிஜேபி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ரஜினி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் வந்து விழுந்தது.
“திமுகவுக்கும் ரஜினிக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தெரிந்ததுதான். முரசொலியில் ரஜினியை பற்றி வந்த சமயத்தில் ரொம்பவே கோபத்தில்தான் இருந்தாராம் ரஜினி. தொடர்ந்து முரசொலியில் ரஜினி தொடர்பான செய்திக்கு மறுப்பும் விளக்கமும் வந்ததைப் பார்த்து சமாதானம் ஆகியிருக்கிறார் ரஜினி.
‘நான் தான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க.? இதெல்லாம் யாரு பண்றது? ஸ்டாலினுக்கு தெரிஞ்சு நடக்குதா... தெரியாமல் நடக்குதா?’ என விசாரித்திருக்கிறார்.
அதற்கு, ‘ஸ்டாலினுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களது குடும்பத்தில் இருப்பவர்கள் சிலருக்கு தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது’ என சொன்னார்களாம் விவரமறிந்தவர்கள். ‘ஸ்டாலின் விரும்பினாலும் அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க நான் அரசியல் பக்கமே வரக்கூடாதுன்னு நினைக்கிறாங்களா?’ 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.