நுவரெலியாவில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதி பகுதியில் குறித்த கார் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், அதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, மேலும் இருவர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை