மஹிந்த எங்களின் நம்பிக்கை நச்சத்திரம்- சித்தார்த்தன்!

இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.


வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களிற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தருவார் என நம்புகின்றோம்.

இவற்றிற்கான தீர்வினை மஹிந்த அரசு எழுத்திலே தரவேண்டும். அனால் அவருடைய பழைய நடவடிக்கைகளினால் உடனடியாக நம்புவது கடினமாக இருக்கும்.

என்றாலும் அவரினால் நிச்சயமாக செய்ய முடியும் என நம்பமுடியும். ஆனால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அவர்களுடன் இருப்பதுதான் பிரச்சனை.

இருந்தாலும் ஜனாதிபதி, மஹிந்த, ரணில் ஆகியோருடன்தான் எமது தீர்வு பற்றி கதைக்க முடியும். சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்பு ஒன்றாக இருந்த போது இவ்விடயம் நடக்காவிட்டாலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பினோம். அதனால்தான் பல விடயங்களுக்காக அவர்களுடன் ஒத்துப்போயிருந்தோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.