இம்ரான் கான் ரஷ்ய பிரதமருடன் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வேடோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அங்கு ரஷ்ய நாட்டின் பிரதமர் டிமிட்ரி மெட்வேடோவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார்.

சீனாவின் ஷங்காய் நகரில் சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள ரஷ்யப் பிரதமரையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று சந்தித்துள்ளதுடன், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் டிமிட்ரி மெட்வேடோவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் விஜயமாக சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.