இந்தியா முழுமையாக அணு ஆயுதப் பயன்பாட்டை பெற்றுள்ளது!

இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


ஐ.என்.எஸ் அரிஹந்த் என்ற அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலானது இன்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தியாவின் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் அணு ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்ற, அதனைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறனுடைய படைக்கலன்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்த நாளானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓன்றாகும்.  உலகளாவிய சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் அணு ஆயுதப் பயன்பாட்டுத் திறனானது தூணாக விளங்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.