ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இதன் மூலம் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும் எனவும் அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.