ரோந்து பணியை முடித்த ஐ.என்.எஸ். அரிஹந்த்

இந்தியாவின் அணுசக்தி ஏவுகணை தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் நேற்று அதன் முதல் ரோந்துப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இது ஒரு பெரிய சாதனை என பிரதமர் மோடி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ் அரிஹந்த் குழுவினரை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த மாபெரும் வெற்றி ஒரு பெரிய சாதனை எனக் குறிப்பிட்டார்.  இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வாழ்த்துவதாக தெரிவித்த அவர்,  இந்த சாதனை எப்போதும் நம் வரலாற்றில் நீங்கா இடம் பெறும் எனவும் மோடி தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை ஐ.என்.எஸ். அரிஹந்தின் வெற்றியை மேம்படுத்தும் எனவும்,  130 கோடி இந்திய மக்களை அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றும் வகையில், ஐ.என்.எஸ். அரிஹந்த் செயல்படுவது மட்டுமல்லாமல், ஆசிய பிராந்தியங்களை காப்பதிலும் இதன் பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.