முடி உதிர்வுக்கு செய்யக்கூடாதவை

கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.


நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.

இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்’ செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.

பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.

குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும்.

கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.