மைத்திரி - மஹிந்தவுடன் இணைந்து சம்பந்தனின் தீபாவளி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நிச்சயமற்ற நிலையில், சமகால ஆட்சியாளர்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை தமிழர்கள் விமர்சையாக
கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் விசேட தீபாவளி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தமிழர் கலாச்சாரத்திற்கு உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன் உட்பட பலர் பலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சமகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் தீபாவளி கொண்டாடியமை அரசியல் சார்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது.
 #Rajavarothiam Sampanthan #Maithripala Sirisena #Mahinda  #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.