மைத்திரி மஹிந்த நடத்தும் பொய்யாட்சிக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரள வேண்டும்!

மைத்திரி – மஹிந்த இணைந்து நடத்தும் பொய்யாட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் நீதி துறையை மீறி மைத்திரி – மஹிந்த இணைந்து நடத்தும் பொய்யாட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி நடத்தும் இந்த ஜனநாயகப் போராட்டம் ரணில் விக்ரமசிங்கவிற்காகவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவோ அல்ல. நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக சட்டவிரோத அரசாங்கத்தை எதிர்க்க முன்வர வேண்டும்.

மேலும் ஜனாதிபதியின் இந்த ஆட்சி அமைப்பு நீதிக்கு முரணானது என சபாநாயகரும் அறிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம்.

சபாநாயகர் கருஜயசூரிய வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அனைத்தையும் நீதிக்கு முரணானது என்றும், சட்ட பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவாக குறிப்பிடுவதானால் இது ரணில் விக்ரசிங்கவின் பதவியை காப்பாற்றுவதற்கான போராட்டமல்ல. நீதிக்கு முரணாக சட்டவிரோதமாக மைத்திரி – மஹிந்த இணைந்து ஜனநாயகத்துக்கும் நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமாகும்’ என தெரிவித்துள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.