ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் 8ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ராஜித சேனாரத்னமேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு பல சர்வதேச நாடுகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

Powered by Blogger.