அதிவேக படகு சேவையை தொடங்கியது கேரள அரசு

கேரள மாநிலத்தில் நீர்வழிப் பாதையிலான போக்குவரத்தில் அதிவேக படகு சேவையை அரசு தொடங்கியிருக்கிறது. வேகா 120 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படகு மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியதாகும். இதற்கு முன்பு இயக்கத்தில் உள்ள படகுகள் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லக் கூடியதாகும்.


வேகா 120 படகு சேவையின் மூலமாக எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எர்ணாகுளத்தில் இருந்து வைக்கம் நகருக்கு புதிய படகின் மூலம் 90 நிமிடங்களில் சென்று விடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படகில் ஒரு பாதியில் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 120 இருக்கைகள் உள்ளன. அதில் 80 இருக்கைகள் சாதாரண வகுப்பிலும், 40 இருக்கைகள் குளிர்சாதன வகுப்பிலும் உள்ளன. சாதாரண பயணச்சீட்டு ரூ.40கவும், குளிர்சாதன பகுதி பயணச்சீட்டு ரூ.80கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மொத்த 1,895 கி.மீ. தொலைவுக்கு நீர்வழிப் பாதைகளில் படகு போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.