மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா!

அழகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. முதல் படத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்த இவர், ‘ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றார். இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்து வருகிறார்.

‘அக்னி தேவ்’ படத்தில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் அமைச்சராக நடிக்கிறார். இதில் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.
இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.
இப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
Powered by Blogger.