மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரின் ஓய்வு!

இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தற்போழுது காலி மைதானத்தில் விளையாடிவருகிறார்.


காலி கிரிகெட் மைதானத்தில் தனது முதலாவது டெஸ்ட் போட்டிகளை ஆரம்பித்த அவர். அதே மைதானத்தில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஹேரத்தின் வருகை இலங்கை அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. என்றாலும் தற்போது 40 வயதைக் கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இடம்பெற்ற 3 டெஸ்ட் தொடர்களினும் முழுமையாக விளையாடவில்லை.

இன்று தனது இறுதி டெஸ்ட் போட்டியை ரங்கன ஹேரத் ஆரம்பிக்கும் போது, சக வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதை படங்களில் காணலாம்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.