பத்திரிகையாளர் 'இந்து' ராமுக்கு விருது!


மூத்த பத்திரிகையாளரும் இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ) சார்பில் கடந்த 2012இல் இருந்து ஆண்டுதோறும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு விருது தொடர்பாக பிசிஐ நேற்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த பத்திரிகையாளரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்துவின் தலைமை செய்தியாளர் ரூபி சர்கார் மற்றும் ‘டெய்லி புதாரி’யின் ராஜேஷ் பரசுராம் ஆகியோருக்கு கிராமப்புற இதழியல் விருதும், கேரளா கௌமூதி நாளிதழின் இணை ஆசிரியர் ராஜேஷுக்கு ‘டெவலப்மெண்டல் ரிப்போர்டிங்’ பிரிவில் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நவா தெலங்கானாவின் கார்ட்டூன் ஆசிரியர் நரசிம்ஹாவுக்கு சிறந்த நாளிதழ் ஓவியத்திற்கான பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு செய்திகள் தொடர்பான பிரிவு இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்பிரிவில் யாரும் தகுதி பெறவில்லை.

தேசிய பத்திரிகை தினமான நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.