மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்: 4 பேர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஐஎஸ்எப் ஜவான் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என 4 பேர் பலியாகி உள்ளனர்.


சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு முகாமிட்டிருந்த பத்திரிகையாளர்கள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தண்டேவடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை பதிவு செய்தனர். அப்போது பத்திரிகையாளர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதலை நடத்தினர்.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் இன்று (நவம்பர் 8) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தண்டேவடா பகுதியில் பசிலி என்ற இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் சிஎஸ்ஐஎப் ஜவான். மற்ற 3 பேரும் பொதுமக்கள். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.   

No comments

Powered by Blogger.