வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது!

சட்ட விரோதமாக ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு கொண்டு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரதி ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ 469 என்ற விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10,917,496 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களான 50,000 யூரொ, 5,000 அமெரிக்க டொலர் மற்றும் 149 சிங்கப்பூர் டொலர் என்பவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.