வரலாற்றில் மகிந்தவுக்கு படுதோல்வி!

வெட்கம் என்ற சிறிய உணர்வு இருந்தால் ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நண்பகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த – மைத்திரி தலைமையிலான அரசு மீதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீதும் நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத்தும் சபைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட குரல் மூலமான வாக்கெடுப்பில் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்குகள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் அரசுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போனதாக சபாநாயகர் அறிவிப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சபை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டதோடு விசேட ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் வரலாற்றில் பெற்ற பாரிய படுதோல்வி இதுவாகும் என்பதால் அவரும், ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவும் தங்களது பதவிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Anura #Mahinda #Sirisena #Meeting #Prees

No comments

Powered by Blogger.