கொலை விவகாரம்: பொலிஸ்மா அதிபர் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்துள்ளார்.


இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பொலிஸ் உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்றுடன் பொலிஸ் மா அதிபர் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இக்குழுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆராய்ந்த பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News #Batticola #police  #poojitha jasunthara #vavunatheevu

No comments

Powered by Blogger.