மீட்கப்பட்ட கைக்குண்டு விசேட அதிரடி படையினரால் செயலிழப்பு

பகமூன மடுதமன நிகவல குளக்கட்டின் அருகிலிருந்து பகமூன பொலிஸாரால் நேற்று மாலை மீட்கப்பட்ட கைக்குண்டாறொன்றை செயலிழக்க செய்யும் பணிகளில் அரலங்வில படை முகாமை சேர்ந்த விசேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.


மடுதமன நிகவல குளக்கட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட கைக்குண்டை நேற்று  ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றில் ஒப்படைத்த நிலையில் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்ற நீதிபதி அதனை அழிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவிற்கமைய அரலங்வில படை முகாமைச் சேர்ந்த விசேட அதிரடி படையினரின் வெடி குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவ்வெடிக்குண்டு இன்று அரலங்வில படை முகாமில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 
Powered by Blogger.