தனது கட்சியைக் காக்க களத்தில் சந்திரிக்கா!

2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் துரோகம் செய்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான யுத்தத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஏனைய பல கட்சிகளுடன் இணைந்து வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுவினவில் இணைந்து கொள்வதனூடாக சுதந்திரக் கட்சியை சிலர் அழிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை சுதந்திரக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் தான் விலகப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையானவர்களுடன் இணைந்து கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
#Tamilnews #SLP #Chandrika  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.