'காற்றின் மொழி' பூஜை போட்ட ஜோதிகா!

எனவே தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜோதிகாவை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை இன்று போடப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இப்படத்தை அறிமுக இயக்குநர் S.ராஜ் இயக்குகிறார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் மற்றும் SR பிரபு தயாரிக்கும் இவர்கள்- செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'நந்த கோபால குமரன்' NGK படத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை