ஜனாதிபதியால் தனது பதவிக்கு ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்துவிட்டார்! – சட்டத்தரணி குருபரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்.பல்கலைக்கழக சட்டபீட தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.


அதனாலேயே அரசியலமைப்பில், 19ஆம் திருத்தத்தினைக் கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை, ரணில் விக்ரமசிங்க குறைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை குறைத்து நாடாளுமன்றிற்கு அதிகாரங்களை வழங்கவேண்டும், அதனை சுயாதீனமாக்க வேண்டும் என்று கருதினாலும், எதிர்காலத்தில் தன்னை ஜனாதிபதி பதவிநீக்கலாம், நாடாளுமன்றை கலைக்கலாம் என்று கருதியே ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் செயற்பாட்டில் ரணில் முன்னின்று செயற்பட்டாரென குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் வரலாற்றை எடுத்துநோக்கும் போது, அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Loyer #Kuruparan

No comments

Powered by Blogger.