மடகஸ்கார் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியீடானது ஒத்திவைப்பு!

இந்து சமுத்திரத்திலுள்ள பெரிய தீவுகளில் ஒன்றான மடகஸ்காரில் இன்று(08) வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இம்மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலையில்லா பிரச்சினை, வறுமை, ஊழல் ஆகிய குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று(07) மடகஸ்காரில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.

எனினும், தற்போது தொடர்ந்து வரும் அசாதாரண பனிக்காலம் அந்நாட்டு மக்களை பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தேர்தலின் முடிவுகள் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மார்க் ரவாலொமானா, அன்ரி ரஜோயெலீனா உட்பட 36 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.