மைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம் !

அனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனநாயகத்துக்கு முரணான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) மன்னாரில் நடத்தப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், “ஜனாதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு  தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவரின் இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டின் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளதோடு சர்வதேசத்தின் மத்தியிலும் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம்’, ‘ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம்’, ‘சஜித்தை பிரதமராக்குவோம்’, ‘மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் ஒரு இராத்திரியே’, ‘ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து’ என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பததைகளை எந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.