தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது-மாவை!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை தற்போது கூட்டமைப்பில் உள்ள கட்சிகளைக் கொண்டு வழமைபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம்.

– இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அவரை வினவியபோதே, அவர் இதனை குறிப்பிட்டார்.

கூட்டமைப்பிற்குள் ஏதேனும் கட்சிகள் இணைக்கப்படுவது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அது தொடர்பிலான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏற்கனவே விட்ட தவறுகளை திருத்தி, ஒரு புதிய யாப்பின் அடிப்படையில் புதிய கூட்டமைப்பை உருவாக்க முடியுமாக இருந்தால், இணைந்து செயற்படுவது குறித்த ஆராய முடியும் என தமிழீழ புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.