குஜராத் கலவரம்: மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு விசாரணை!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் பலர் இறந்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.


 அப்போது குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை 2012-ம் ஆண்டு கலவர வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த கலவரத்தில் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, நரேந்திர மோடியை கலவர வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நிராகரித்தது.

இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனை நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் விசாரிக்க உள்ளனர். #GujaratRiots

#Modi #SupremCourt #கலவரம்  #மோடி  #விடுதலை  #வழக்கு  #சுப்ரீம்  #கோர்ட்டு #விசாரணை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.