பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், மூன்று பொலிஸாரும் காயம்!

பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலமையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் மீது மிளகாய் தூள் கலந்த நீரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இரண்டு உறுப்பினர்களினதும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பாராளுமன்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் இதன்போது காயமடைந்துள்ளார். அத்துடன், சபாநாயகர் மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீது மகிந்த ராஜபக்ச தரப்பினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இருந்த திசையில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo #Parliment  #Tamilarul.net 

Powered by Blogger.