பாராளுமன்றம் மீண்டும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்நது
பாராளுமன்றம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் பாராளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுற்றி வளைத்ததுடன் அருந்திக பெர்ணான்டோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Parliament

No comments

Powered by Blogger.