யாழ் அரசியலில் சேவலும் மயிலும்??

தமிழ்மக்கள் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்
இக்காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் பெரிதும் கணிந்துவிட்டதாகவும் யாழ் புத்திஜீவிகளின் பெரு முயற்சியால் சாத்தியமானதாயகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் பொதுவான தேர்தல் சின்னத்தின் கீழ் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுபற்றி தாயகத்தில் இருந்து அரசியல் முக்கியஸ்த்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு பலம்வாய்ந்த கூட்டணி அமைவதான செய்தி தமிழ்மக்களின் காதுகளில் தேனை வார்த்ததாக மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் பால் வார்த்ததாகவும் அமையும் என்றார்.

இத்தகைய சூழ்நிலையைக் கண்டு முதலமைச்சரும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

விரைவில் புதிய ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என யாழ் வட்டாரங்கள் கூறுகின்றன.
-தி.திபாகரன்-

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Kajenthirakumar #vigneswaran #Jaffna

No comments

Powered by Blogger.