விஸ்வாஸம் படம் குறித்த ஒரு அபத்தமான வதந்தீ!

‘நம் இருவரது படங்களும் ஒரே தேதியில் மோதவேண்டாமே’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி போன் மூலமாக வேண்டுகோள் விடுத்ததாகவும், அதுகுறித்து தனது தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுடன் நடிகர் அஜீத் அவசர அவசரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஒரு அபத்தமான செய்தி இன்று மதியம் முதல் வலைதளங்களில் நொண்டியடித்து வருகிறது.


இன்று மதியம் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தன் படமும் பொங்கலுக்கே வருவதாக சிம்பு துடுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து சில ஃபேக் ஐ.டி.யில் உலவும் நபர்கள் இந்த அஜீத்-ரஜினி போன் காமெடியை விதவிதமான பதிவுகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் தான்தான் என்று நிரூபிக்க தனக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகவே ‘பேட்ட’ ரிலீஸுடன் வருவதை அஜீத் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளரே விரும்பினால் கூட அஜீத் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடமாட்டார் என்கிற உண்மை ஒருபுறமிருக்க எப்படித்தான் இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்ப துணிகிறார்கள் என்று தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் தல விஸ்வாசி ஒருவர்.

No comments

Powered by Blogger.