கனகபுரம் துயிலும் இல்ல தேசிய நினைவெழுச்சி நாள்!

கிளிநொச்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இங்கு திரண்டிருந்தனர். மாலை 4 மணியில் இருந்தே இங்கு மக்கள் திரளத் தொடங்கினர்.
பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தை பொதுச் சுடர் ஏற்றினார். தொடர்ந்து ஏனையவர்கள் சுடர்களை ஏற்றினர்.
கிளிநொச்சியின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை