மஹிந்தவின் பதவியை பறிக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றிருந்தது.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகிவந்தன.

இந்நிலையில், அவ்வாறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், அவ்வாறானதொரு கருத்தை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mahinda #Sirisena #Susil piramajantha

No comments

Powered by Blogger.