மஹிந்த அணியின் அகோரத்தன்மை - விஜித ஹேரத்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அகோரமான முறையில் நாடாளுமன்றத்தில் இன்று செயற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்ப நிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதைத் தடுப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகளைச் செய்தனர். நாடாளுமன்ற அமர்வை நடத்தவிடாது சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்தனர்.

நாட்டின் அரசியலமைப்பு மிகவும் முக்கியமான கௌரவத்துகுரிய ஆவனமாகவே பாதுகாக்கப்படுகின்றது. அதனைத் தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து என்மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீதும் தாக்கினார்கள். இது அவர்களின் அகோர தன்மையினையும் முழுமையான ஜனநாயக விரோத செயற்பாட்டையுமே வெளிப்படுத்துகின்றது“ என தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #vithitha-her

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.