உதவி திட்டங்கள் வழங்கப்படாதமையினால் வேணாவில் கிராம மக்கள் கவலை

முல்லைத்தீவு, வேணாவில் கிராமத்தில் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட எவ்வித உதவிகளும் வழங்கப்படாதமையால் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக
அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கிராமத்திலுள்ள குடும்பங்கள் தொழில் வாய்பற்ற நிலையிலுள்ளமையால் வருமானங்களை பெற்றுகொள்ள முடியாமல் துன்பத்தில் வாழ்ந்து வருவதாக  அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இப்பிரதேசத்தில் 255க்கு மேற்பட்ட குடும்பங்கள் சமுர்த்திப்பயனாளிகளாக உள்வாங்கக்கூடிய நிலைமை காணப்படுகின்ற போதிலும் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையென அவர்கள் மேலும்  குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை இக்கிராமத்தில் வீதிகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட  பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் அம்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Powered by Blogger.