யாழில் பெண்களின் அரசியல் பிரவேசமும் அவசிய நிலையும் கருத்தாய்வு

பெண்களின் அரசியல் பிரவேசம் அவசியமானதும் அவசரமானதுமாக காணப்பட்ட இவ்வேளையில் அதாவது
இருபத்தைந்து வீத பெண்களுக்கான ஒதுக்கீடு காரணமாக பல பெண்கள் அரசியலில் பிரவேசிக்கும் தருணம் எட்டியிருந்தது.  ஆனால் அவர்கள் அரசியல் தளத்திற்கு தகுதியானவர்களா என்பது கவனிக்கப்படவில்லை.  இதனால் கட்சிகளில் பல குளறுபடிகளும் ஏற்பட்டிருக்கிறது.  இந்நிலையில் தான் யாழ். சமூக செயற்பாட்டு மையம் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் 125 பெண்களை உள்வாங்கி செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.  அதன் நிறைவு நாள் நிகழ்வுகள் இன்று (15.12.2018) யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் தேர்தல் ஆணையாளர்.திரு. அகிலன்.   யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் திருமதி. கிருத்திகா மற்றும் பலரும் விருந்தினராக வருகை தந்திருந்தனர். யாழ்ப்பாண பிரபல இளம் சட்டத்தரணி திரு.ரஞ்சித் அவர்கள் பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டு அரசியல் சாணக்கியங்களையும் பெண்கள் இக் களத்தில் எதிர்நோக்கும் சவால்களையும் ஆதாரங்களூடாக விளக்கியிருந்தார்.
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் மற்றும் பணியாளர்கள் நிகழ்வினைச் சிறப்புற முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.