கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டிக் கொண்டது !

ஏதோவொரு வகையில் கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது . அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க் கொண்டு இருக்கின்றது என போரதீவுப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சி.சிவனேசன்(வெள்ளையன்) தெரிவித்தார்.


தற்போதைய அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உண்மையில் தமிழ் மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க ஏதாவது செய்ய நினைத்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏதாவது செய்திருக்கலாம். தமிழ் மக்களை எந்தளவுக்கு ஏமாற்ற முடியுமோ அந்தளவுக்கு ஏமாற்றிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார்.

எங்களை பொறுத்தளவில் மஹிந்த ராஜபக்ச செய்த அபிவிருத்தி விடயங்களைக் போன்றுகூட அவர் செய்து முடிக்கவில்லை.

தற்போதைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு நான் நிறைய விடயங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த போதும் அதனை தடுத்தவர் ரணில் விக்ரமசிங்க என தற்போதைய ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு கூறுகின்ற வேளையில் அதனை நன்கு அறிந்து கொண்டு கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவினை கொடுத்துள்ளனர் என்றால் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்றுதான் நாங்கள் கருத வேண்டும்.

இவ்வாறாக ரணிலை ஆதரிப்பதால் பலதரப்பட்ட பாதகமான விடயங்கள் உள்ளது என தெரிந்து கொண்டும் ஏன் ரணில் விக்ரமிசிங்கவை ஆதரித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் ஏதொவொரு விடயத்தில் மாட்டியுள்ளது. அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணை போய்க் கொண்டு இருக்கின்றது.

இந்த நாட்டில் பொரும்பான்மை இனத்தினை சேர்ந்த கட்சி ஒன்றுதான் ஆட்சி அமைக்க முடியும். உண்மையாக தமிழ் மக்களுக்குரிய தீர்வினைத்தரக் கூடிய வல்லமை மஹிந்த ராஜபக்சவிடம் தான் இருக்கின்றது.

அவரால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை தரமுடியும். அவரிடம் தான் அந்த தைரியம் உள்ளது. அவர் கூறுவதையே இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் தற்போதைய அரசியல் நிலையென என அவர் தெரிவித்தார்.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.